Tuesday, July 12, 2011

ஆணிப்பொன்னம்பலக் காட்சி/Anni Ponnambala Katchi

(4914)
ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சிய டி - அம்மா
அற்புதக் காட்சிய டி

( 4915 )

ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு
வீதிஉண் டாச்சுத டி - அம்மா
வீதிஉண் டாச்சுத டி ஆணி

( 4916 )

வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு
மேடை இருந்தத டி - அம்மா
மேடை இருந்தத டி ஆணி

( 4917 )

மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு
கூடம் இருந்தத டி - அம்மா
கூடம் இருந்தத டி ஆணி

( 4918 )

கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை
மாடம் இருந்தத டி - அம்மா
மாடம் இருந்தத டி ஆணி

( 4919 )

ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
என்னென்று சொல்வன டி - அம்மா
என்னென்று சொல்வன டி ஆணி

( 4920 )

ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
சீர்நீலம் ஆச்சுத டி - அம்மா
சீர்நீலம் ஆச்சுத டி ஆணி

( 4921 )

பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
பவளம தாச்சுத டி - அம்மா
பவளம தாச்சுத டி ஆணி

( 4922 )

மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம்
மாணிக்கம் ஆச்சுத டி - அம்மா
மாணிக்கம் ஆச்சுத டி ஆணி

( 4923 )

பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
பேர்மணி ஆச்சுத டி - அம்மா
பேர்மணி ஆச்சுத டி ஆணி

( 4924 )

வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள்
வெண்மணி ஆச்சுத டி - அம்மா
வெண்மணி ஆச்சுத டி ஆணி

( 4925 )

புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி
பொன்மணி ஆச்சுத டி - அம்மா
பொன்மணி ஆச்சுத டி ஆணி

( 4926 )

பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம்
படிகம தாச்சுத டி - அம்மா
படிகம தாச்சுத டி ஆணி

( 4927 )

ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம்
இசைந்தபொற் றம்பம டி - அம்மா
இசைந்தபொற் றம்பம டி ஆணி

( 4928 )

பொற்றம்பம் கண்டேறும் போதுநான் கண்ட
புதுமைஎன் சொல்வன டி - அம்மா
புதுமைஎன் சொல்வன டி ஆணி

( 4929 )

ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல
என்னள வல்லவ டி - அம்மா
என்னள வல்லவ டி ஆணி

( 4930 )

ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம்
ஆகவந் தார்கள டி - அம்மா
ஆகவந் தார்கள டி ஆணி

( 4931 )

வந்து மயக்க மயங்காமல் நான்அருள்
வல்லபம் பெற்றன டி - அம்மா
வல்லபம் பெற்றன டி ஆணி

( 4932 )

வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி
மணிமுடி கண்டேன டி - அம்மா
மணிமுடி கண்டேன டி ஆணி

( 4933 )

மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
மற்றது கண்டேன டி - அம்மா
மற்றது கண்டேன டி ஆணி

( 4934 )

கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற்
கோயில் இருந்தத டி - அம்மா
கோயில் இருந்தத டி ஆணி

( 4935 )

கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில்
கூசாது சென்றன டி - அம்மா
கூசாது சென்றன டி ஆணி

( 4936 )

கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள்
கோடிபல் கோடிய டி - அம்மா
கோடிபல் கோடிய டி ஆணி

( 4937 )

ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன்
ஐவண்ணம் ஆகும டி - அம்மா
ஐவண்ணம் ஆகும டி ஆணி

( 4938 )

அங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும்
அப்பாலே சென்றன டி - அம்மா
அப்பாலே சென்றன டி ஆணி

( 4939 )

அப்பாலே சென்றேன்அங் கோர்திரு வாயிலில்
ஐவர் இருந்தார டி - அம்மா
ஐவர் இருந்தார டி ஆணி

( 4940 )

மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர்
மணிவாயில் உற்றேன டி - அம்மா
மணிவாயில் உற்றேன டி ஆணி

( 4941 )

எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக
இருவர் இருந்தார டி - அம்மா
இருவர் இருந்தார டி ஆணி

( 4942 )

அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில்
அன்பொடு கண்டேன டி - அம்மா
அன்பொடு கண்டேன டி ஆணி

( 4943 )

அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன்
அம்மை இருந்தாள டி - அம்மா
அம்மை இருந்தாள டி ஆணி

( 4944 )

அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
அமுதமும் உண்டேன டி - அம்மா
அமுதமும் உண்டேன டி ஆணி

( 4945 )

தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
சந்நிதி கண்டேன டி - அம்மா
சந்நிதி கண்டேன டி ஆணி

( 4946 )

சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது
சாமி அறிவார டி - அம்மா
சாமி அறிவார டி
ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சிய டி - அம்மா
அற்புதக் காட்சிய டி

Revue and adjusted by Dhaya Mesrobian

Pallavi (refrain):

Oh nursing Mother my mighty mother so been wonder you have giving me the vision of
the golden sphere so pure with shining gold if seems that the divine vision are so rare and
wonderful.

Kannihal (stanzas):

Suddenly appear a gold mountain of luxuriant sphere, radiating glowing blazing Grace.
Oh Mother, then within that appear a path of light.
First a mountain of light came showing an open path inside.
Oh Mother I went to the path within the light, there I saw a platform
Above that platform there was an open hall.
Oh Mover there was a open hall!
Above that platform there was a tower of seven storage with so many wonders.
How can I reveal all this in words?
Oh Mother how can I describe this in words?
There was a white light.
It turned into a blue sapphire.
Oh Mother it turned into a blue sapphire.
On the other plane the blackish blue gem transform into red coral color.
Oh Mother all became fruitful.
On another plane the green emerald gem transformed into a red ruby.
Oh Mother it became a red ruby.
After this transformation the white giant pearl became a colorless crystal, like a diamond
jewel.
Oh Mother it became a great jewel.
In a different plane, I was confronted with a mass of coral changing into moonstone.
Oh Mother changing into moonstone
The group of color which forms the colorless crystal became white light:
it represent the mountain white light, some king of para shakthi and other shakti.
From the white came the red ruby light
Oh Mother this is the transformation light.
All the multi colors came to transform into the golden gem,
Oh Mother these turned into a golden gem!
Then ultimately all became colorless, the crystal prism.
Oh Mother it became the crystal prism!
Above the seven storage was a golden pillar.
A most agreeable golden pillar.
Oh Mother a creative golden pillar!
When I ascend how can I revealed the new unknown sphere of this golden pillar.
Oh Mother how can I describe it?
There was so much pressure to not go up.
Oh Mother so much pressure to not go up!
Then came thousand celestial powers and Beings, giving strong pressure on me.
Oh Mother they were coming by thousands!
They enchanted me, without surrendering to them I got away with the help of God’s
Grace and power.
Oh Mother a special Grace power was there!
With this help I could climb that golden pillar and golden crest experience.
Oh Mother I saw the jeweled peak!
Above the crest jewel was the highest ending final stage experience.
Oh Mother it was then that I saw it!
Even above the apex in the supportless shrine there was a golden shrine with thousand
eight carat purity of gem gold.
Oh Mother there was the shrine!
Within that tower of that golden eye I went without hesitation.,
Oh Mother without hesitation I went inside!
Inside the towering gate were million of core of pure shaktas .
Oh Mother so many of them !
There they manifest they powers and religions and there are five colors, white, red, green,
blue, black shaktas who manifest they powers.
Oh Mother five colors!
They saw me and ask me who are you, but I never answer and went up.
Oh Mother I went beyond.
Having gone beyond. I came to the sacred doorway, where there were the was five
function of God.
Oh Mother there was the five function of God!
They never obstacle me but show me the way of the gem set door.
Oh Mother I reached the jeweled doorway!
Contemplating the doorway I saw the Divine Father, Mother of God.
They where there, helping me to go.
Oh Mother two of them!
I drew near the holy entrance and there they revealed:
We are The the supreme Mother, Father nearest to God.
Oh Mother I look out with love!
First I met My dear Mother.
She is the Heaven gate!
Oh Mother My Mother!
I looked upon her, received her Grace and Divine ambrosia.
Oh Mother I dined on ambrosia.
Then only with the Grace of the Divine Mother I could see the vision of the supreme
Dancing King inside my soul.
Oh Mother I saw the sanctum!
At this moment only God was advising me in my soul with His dancing Grace.
Only Him knows what he gave me by his Grace.
Oh Mother only God knows!

This is wonderful since

3 comments:

  1. Live the life testator karunyam!

    Karunyam such dangers to the life camucarikal carelessness predestination promise will be the reaction?

    In the case of a husband and wife to exclude jivarkal prevent hunger. Pencatiyai husband's arrest, detain the children's father, father's arrest, detain cisarai acariyar, God forbid --- blow, - stop drinking the king, '- the pros and cons of the sanctions aravar tataipatamal the slightest aravarai cerumallatu to go elsewhere, and rely on the fact, that life should hold kindness discipline to learn.

    When akaran wanted to give life to jivarkal paciyala sorry, wanted punniyaratu pure heart and other debits karanamaki as intended, and that should be known to be true as yogis punniyarakalai.

    While intended to akaran serves, he is infact the kalikkinrapati they learn to eat, knowing the truth as Johnny.

    In that moment will give nourishment to the soul of the hungry, exhausted both inside and outside, up and down and side referees, philosophies, etc. Everything is full of acrobatic prowess cooling talaiya cold throughout the body, which mukattinitam the purittu, the definition of God, pray in pirattiyatcat experience pleasure and satisfaction inpamakiya God.

    So that's the good deeds that God lakh, muttar enjoying the bliss of God, to learn. Hungry are you using the goddess Santoshi punniyarkalai So this is the fact that they should worship.

    Ninkaca stand at risk of hunger, which Cheever utaiyavarkalaki discipline as jivakarunya any jatiyarayinum October, any actions which camayattarayinum Yokiyar .. etc. .. utaiyavakal that special exception, the worship of Almighty God that the evidence should be cattiyan.; --- Fluorescent tiruarut Live

    I anmaneyan; - katirvelu.

    ReplyDelete
  2. வள்ளலார் எழுதி வைத்துள்ள ஜீவ காருண்யம் !

    ஜீவ காருண்யமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதையாலும் ஊழ் வினையாலும் சத்தியமாக வராது ?

    ஜீவர்களுக்குப் பசியை நீக்குகின்ற விஷயத்தில் புருஷனை மனைவி தடுத்தாலும்.பெண்சாதியைப் புருஷன் தடுத்தாலும்,பிள்ளைகளைத் தந்தை தடுத்தாலும்,தந்தையைப் பிள்ளைத் தடுத்தாலும் ,சீஷரை ஆசாரியர் தடுத்தாலும்,---அடியாரை ஆண்டவன் தடுத்தாலும்,--குடிகளை அரசன் தடுத்தாலும்,;--அந்த தடைகளால் சிறிதும் தடைபடாமல் அரவர் செய்த நன்மை தீமைகள் அரவரைச் சேருமல்லாது வேறிடத்தில் போகாது என்பதை ,உண்மையாக நம்பி,ஜீவ காருண்ய ஒழுக்கத்தை நடத்த வேண்டும் என்றும் அறிய வேண்டும்.

    உள்ளபடி பசியால வருந்துகின்ற ஜீவர்களுக்கு ஆகாரங் கொடுக்க நினைத்த போது,நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால் ,அந்தப் புண்ணியரகளை யோகிகள் என்றே உண்மையாக அறியவேண்டும்.

    ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும் போது,அவர் உண்ணுவது தாம் உண்ணுவதாக அறிந்து களிக்கின்றபடியால் ,ஜானிகள் என்றே உண்மையாக அறியவேண்டும்.

    ஆகாரம் கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறமும், கீழும் மேலும்,நடுவும் பக்கமும்,நிறைந்து கரண முதலிய தத்துவங்கள் எல்லாம் குளிர்வித்துத் தேகம் முழுவதும் சில்லென்று தழைய ,முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற ,கடவுள் விளக்கத்தையும் ,திருப்தி இன்பமாகிய கடவுள் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்கள்.

    ஆதலால் அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்கள் என்றும்,கடவுள் இன்பத்தை அனுபவிக்கின்ற முத்தர் என்றும்,அறிய வேண்டும்.பசி நீங்க உண்டு சந்தோஷித்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்கள் ஆதலால் இவர்களே தெய்வமும் என்று உண்மையாக அறியவேண்டும்.

    ஜீவகாருண்ய ஒழுக்கம் உடையவர்களாகி சீவர்களைப் பசி என்கின்ற அபாயத்தில் நின்றும் நீங்கச செய்கின்ற உத்தமர்கள் எந்த ஜாதியாராயினும் ,எந்தச் சமயத்தாராயினும் எந்தச் செய்கையை உடையவர்களாயினும்,...தேவர்,.முனிவர்..சித்தர் ..யோகியர்..முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்பு உடையவாகள் என்று சர்வ சக்தியை உடைய கடவுள் சாட்சியாக சத்தியஞ் செய்யப்படும் என்று அறியவேண்டும்.;---திருஅருட் பிரகாச வள்ளலார்

    அன்புடன் ஆண்மநேயன்;--கதிர்வேலு.

    ReplyDelete